கனகம்புளியடியில் வாள்வெட்டு!! மூவர் படுகாயம்!

சாவகச்சேரி – கனகம்புளியடி சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்ற பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த அறுவர் கொண்ட குழுவினரே இவர்கள் மீது வாள்களால் வெட்டிவிட்டுத் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுகிறது.

சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன், ஆட்டோச் சாரதியான 24 வயதுடைய நாகசாமி நந்தன், வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related Posts