கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தவர்களுக்கு பிணை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜராகிய போது தலா 50ஆயிரம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டார், மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்தமாதம் 20ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

மாவீரர் துயிலும் இல்லத்தில் கல்லறை அமைக்க முற்பட்ட முன்னாள் போராளிடம் விசாரணை

Related Posts