கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் உருப்பெறுகிறது பொதுக்கல்லறை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளை, மாவீரர்களின் உறவினர்கள் முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

யுத்த நிறைவிற்கு பின்னர் சிதைக்கப்பட்ட குறித்த துயிலும் இல்லமானது பராமரிப்பின்றி காணப்பட்ட நிலையில், உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக் கல்லறை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

படையினர் வசமிருந்த கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்டது. யுத்தத்தின் பின்னர் முதன்முறையாக கடந்த மாவீரர் தினத்தில் அங்கு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுடரேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts