கத்தி படத்திற்கு கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு!

தமிழ் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் கத்தி.

kaththi_vijay

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்னும் சில நாட்களில் லண்டனில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தை ராஜபக்சேவின் நண்பர் தான் தயாரிக்கிறார் என்று சிலர் சொல்லிவந்த நிலையில், இதை முற்றிலுமாக மறுத்தது தயாரிப்புக்குழு. ஆனால் இதை ஏற்காத ’முற்போக்கு மாணவர் முன்னணி’யை சார்ந்தவர்கள் இப்படத்தை தடை செய்ய, திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் இதைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்தப்போவதாகவும், அதில் அனைத்து கல்லூரி மாணவர்களும் கலந்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Posts