கத்தி, கொட்­டன்­க­ளு­டன் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம்!!

கத்தி, கொட்­டன்­க­ளு­டன் அதி­கா­லை­யில் வீடு­க­ளுக் குள் புகுந்த கும்­பல் அட்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்­டது. ஐந்து வீடு­க­ளில் இருந்த பொருள்­கள், வேலி­கள், மின்­கு­மிழ் கள் தாக்­கிச் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்­தச் சம்­பம் நேற்று அதி­காலை யாழ்ப்­பா­ணம் ஏழா­லை­யில் நடந்­துள்­ளது.

கொக்­கு­வில், சுன்­னா­கம், இணு­வில், மானிப்­பாய் பகு­தி­க­ளில் கடந்த வாரம் இடம்­பெற்ற தொடர்­வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து அந்­தப் பகு­தி­க­ளில் 24 மணி­நே­ரம் சுற்­றுக்­கா­வல் இடம்­பெற்­றி­ருந்­தது.

அத்­து­டன் திடீர் சுற்­றி­வ­ளைப்­பும் மேற்­கொள்­ளப்­பட்டு சந்­தே­கத்­தில் 3பேர் கைது செய்­யப்­பட்­டி­ருந்­த­னர். இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில், ஏழா­லை­யில் வன்­மு­றைச் சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அதி­கா­லை­ வேளை, வீட்டு வள­வுக்­குள் நுழைந்த 4 பேர் அங்கு முற்­றத்­தில் ஒளிர்ந்து கொண்­டி­ருந்த மின்­கு­மிழை முத­லில் உடைத்­துத்­துள்­ள­னர். பின்­னர் நீர்த்­தாங்கி, கதி­ரை­கள், உள்­ளிட்ட தள­பா­டங்­க­ளைச் சேத­மாக்­கி­னர். வீட்­டின் உரி­மை­யா­ளர் அவ­லக் குரல் எழுப்ப அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­னர்.

அதன்­பின்­னர் அந்­தப் பகு­தி­யில் உள்ள 4 வீடு­க­ளுக்­குள் அந்­தக் கும்­பல் நுழைந்து அட்­ட­கா­சத்­தில் ஈடு­பட்­டது என்று தெரி­விக்­கப்­பட்­டது. வீட்டு வேலி­க­ளைச் சேத­மாக்­கி­ய­து­டன், வீட்டு வள­வில் இருந்த பொருள்­க­ளைச் சேத­மாக்­கி­னர் என்­றும், சில­வற்றை எடுத்­துச் சென்­ற­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தச் சம்­ப­வங்­க­ளால் அந்­தப் பகுதி மக்­கள் விழிப்­ப­டை­யவே அவர்­கள் அங்­கி­ருந்து தப்­பிச் சென்­றுள்­ள­னர். தப்­பி­யோ­டும்­போது வீடு­கள் மீது கற்­களை வீசி­ய­வாறு அவர்­கள் தப்­பிச் சென்­றுள்­ள­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. அவர்­கள் கட்­டு­வன் பகு­தி­யூ­டா­கத் தப்­பிச் சென்­ற­னர் என்­றும் மக்­கள் தெரி­வித்­த­னர்.

சம்­ப­வம் தொடர்­பாக 119 அவ­ச­ரப் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டும் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வர­வில்லை என்று மக்­கள் விச­னம் தெரி­வித்­த­னர். முற்­ப­கல் 10 மணி­ய­ள­வி­லேயே சுன்­னா­கம் பொலி­ஸார் சம்­பவ இடத்­துக்கு வந்து விசா­ரணை நடத்­தி­னர் என்­றும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

கட்­டு­வன், தெல்­லிப்­ப­ழைப் பகு­தி­க­ளில் கடந்த சில நாள்­க­ளாக கத்தி முனை­யி­லான வழிப்­ப­றி­கள், திருட்­டுக்­கள், வர்­தக நிலை­யங்­களை உடைத்து திரு­டு­தல் போன்ற சம்­ப­வங்­கள் இடம்­பெ­று­கின்­றன என்று மக்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்­தச் சம்­ப­வங்­கள் அதி­காலை வேளை­யி­லேயே நடக்­கின்­றன என்­றும், அவை தொடர்­பில் எவ­ரும் கைது செய்­யப்­ப­டு­வ­தில்லை என்­றும் மக்­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.

Related Posts