கிளிநொச்சி – பூநகரி, முட்கொம்பன் பகுதியில் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் வாழ்ந்து வந்த பெண்ணை கடத்திச்சென்ற குற்றச்சாட்டில் அவரது கணவரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கிளிநாச்சி, பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முட்கொம்பன் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் முதல் கணவனால் கைவிடப்பட்ட நிலையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் பெண்ணை குறித்த பெண்ணின் கணவர் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது கத்தியை காட்டி பலாத்காரமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுள்ளார்.
இது தொடர்பில் பிரதேச மக்கள், உறவினர்கள் இணைந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
நீண்ட தேடுதலின் பின்னர் குறித்த பெண் மீட்கப்பட்டதுடன் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதனை தொடர்ந்து சந்தேகநபர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.