கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்க தயார் – சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசனுக்கு பெரிய படங்கள் அமைகின்றன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தீவிரமாக நடிக்கிறார். அஜித் ஜோடியாக நடித்த ‘வேதாளம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

கவர்ச்சியில் தாராளமாக நடிப்பதாக சுருதிஹாசன் மீது விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது;- பிரபலமாக இருப்பது மகிழ்ச்சி தரக்கூடியது. அதற்காக நான் நடிகையாகவில்லை. நட்சத்திர அந்தஸ்தும் சந்தோஷமானதுதான் அதற்காகவும் நடிக்க வரவில்லை. நடிப்பு என்பது என் பரம்பரையில் இருக்கிறது அந்த ஆர்வத்தில் தான் நடிகையானேன்.

கவர்ச்சி பிடிக்குமா, குடும்பப்பாங்கான வேடம் பிடிக்குமா என்று என்னிடம் கேட்கின்றனர். இரண்டையும் சமமாகவே பார்க்கிறேன். நடிக்க வந்த பிறகு எல்லா கதாபாத்திரங்களும் ஒன்றுதான். கவர்ச்சி என்பது டூயட் பாடுவது, மரத்தை சுற்றி ஓடுவது என்று சாதாரணமாக நினைக்கிறார்கள். அதுவும் கஷ்டமானதுதான் என்பதை யாரும் உணர்வது இல்லை.

கவர்ச்சியாக நடிப்பது எளிதானது அல்ல. அதிலும் ரொம்ப சிரமம் இருக்கிறது. அதை குறைத்து மதிப்பிட வேண்டாம். கதைக்கு என்ன தேவையோ அதுமாதிரி நடிக்க நான் தயார். கதைக்கு கவர்ச்சி தேவை என்றால் கவர்ச்சியாகவும் நடிப்பேன். இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

Related Posts