கதிர்காம ஆலய காணியை திருப்பதிக்கு வழங்க திட்டமா?

கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான காணியை இந்தியாவின் திருப்பதி தேவாலயத்திற்கு வழங்கவுள்ளதாக, அப் பகுதி மக்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.

கதிர்காமம் – நாகதீபம் பகுதிக்கு அருகிலுள்ள 30 ஏக்கர் நிலப்பரப்பே இவ்வாறு ருகுணு கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக நிலமேவால் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி கதிர்காம நகரிலுள்ள ஆலய வளாகத்திற்கு நேற்று பிற்பகல் வந்த மக்கள் போராட்டத்தினை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், இது போன்ற நடவடிக்கைகளை பஸ்நாயக நிலமே உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது கோரியுள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும் இது குறித்து பஸ்நாயக்க நிலமே, டீ.பி.குமாரவிடம் வினவிய போது

இதற்கு பதிலளித்த அவர் குறித்த குற்றச்சாட்டை முற்றாக மறுத்துள்ளார்.

மேலும் அப் பகுதியில் பண்ணை அமைக்கவே திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts