கதிர்காமம் வல்லி குகை ரஜமகா விகாரையின் விகாராதிபதி ரம்புக்வெல்ல சங்கானந்த தேரர் மீது நேற்று மாலை இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை விகாரைக்குள் புகுந்த இனந்தெரியாத குழுவினர் கூரிய ஆயுதங்களினால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தேரர் தற்பொழுது தெபரவெவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
தாக்குதலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லையெனவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.