கண் பார்வையற்றவர்களுக்கு கபாலி சிறப்புக் காட்சி

சத்யம் திரையரங்கம் போன வார இறுதியில் ஒரு மிக பெரிய முயற்சியை செய்து சாதித்து இருக்கிறது. கண் பார்வை யற்றவர்களுக்கு Audio Descriptive Movie திரையிட்டு இருக்கிறார்கள். இந்த Audio Descriptive Movie ஒலி சித்திரத்தில் இருந்து எப்படி வேறு படும் என்றால், உதாரணத்துக்கு கபாலி படத்தில் அந்த கோழிக்கறி காட்சியில், ரஜினி அமர்ந்து இருக்கும் போது, அடுத்து அசாதாரண சூழல் வரப்போகிறது என்பது வெறும் visual மூலமாக மட்டுமே தெரியும். ரஜினிக்கு பின்னால் நிற்கும் ஜான் விஜய் தற்காப்புக்கு துப்பாக்கியை எடுப்பார், அதை ரஜினி வேண்டாம் என செய்கையால் காமிப்பார். ஆடியோ மட்டும் கேட்கும் மாற்று திறன் கொண்ட செவி வழி அறிபவர்களுக்கு இப்படி ஒரு காட்சி இருப்பதே தெரிந்திருக்க வாய்ப்பில்லை, அதையும் அவர்கள் அறியும் வண்ணம் அந்த இடைவெளிகளில் எல்லாம்

“அமீர் இப்போ பின்னால் நின்று துப்பாக்கியை எடுக்க, கபாலி வேண்டாம் என்கிறார்” போன்ற ஆடியோ தகவல்களை சேர்த்து இருப்பார்கள், இது அவர்களுக்கு என்றே பிரத்தேயகமாக ரிக்கார்ட் செய்யப்பட்டு, அவர்களுக்கு என்று கொடுக்கப்படும் ஸ்பெஷல் device ல் மட்டுமே கேட்கும். ஆகையால் அவர்களுக்கு என்று தனிக்காட்சி போட்டு காமித்து அவர்களை விலக்கவும் தேவையில்லை, எல்லோரும் பார்க்கும் காட்சிகளில் அவர்களும் அந்த device துணைகொண்டு கண்டு களிக்கலாம்! ஒரு முழு நாவலை படித்து உணர்வதை போல ஒரு உணர்வினை இந்த முயற்சி கொடுக்கும்.

சோதனை காட்சியாக, சென்ற வாரம் கபாலி திரையிட்டு காமிக்க பட்டுள்ளது, கை தட்டி ஆரவாரத்தோடு பெருத்த வரவேற்பை பெற்று இந்த காட்சி நிறைவடைந்து உள்ளது!

வாழ்த்துவோம் மாற்று திறனாளிகளை யார் கைவிட்டாலும் அறிவியலும், அவர்களை கருத்தில் கொள்ளும் மானுடமும் கைவிடாது!

நன்றி – வாசுகி பாஸ்கர்

Related Posts