கண்ணீர் வடித்த சிவகார்த்திகேயன்.. ஆறுதல் சொன்ன சிம்பு !

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ரெமோ படத்தின் சக்ஸஸ் மீட் விழா சென்னையில் நடைபெற்றது.

sivakarthikeyan-simbu

ரெமோ படக்குழுவினர் உட்பட பலர் பங்குகொண்ட இந்த விழாவில், ரெமோ திரைப்படம் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்ததாகவும், அதற்காக தானும், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜாவும் பல இடையூறுகளை சந்தித்தாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும் எங்களை நிம்மதியாக வேலை செய்ய விடுங்கள் எனவும் சிவகார்த்திகேயன் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு சிவகார்த்திகேயனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிம்பு தனது டுவிட்டரில், ‘இதற்காக வருத்தப்பட வேண்டாம் சிவா. உங்களுக்கு தொல்லை கொடுத்தவர்கள் யார் என்பதை நானும் அறிவேன். அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் ஒரு வகையில் நல்லதே. கடின உழைப்பே அனைத்திற்கும் பதில் சொல்லும். எல்லாவற்றையும் கடவுள் பார்த்து கொள்வார், அவரிடம் விட்டுவிடுங்கள்’ என்று கூறியுள்ளார்.

Related Posts