கண்ணீரில் நனைந்த முள்ளிவாய்க்கால்: பொதுச்சுடர் ஏற்றினார் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வில், வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பொதுச் சுடர் ஏற்றிவைத்து நினைவேந்தல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது தமது உறவுகளை நினைத்து மக்கள் கண்ணீர் மல்க கதறியழுது மக்கள் தமது ஆற்றாமையை தீர்த்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் முதன் முதலாக இம்முறை சர்வமதத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளதோடு, அவர்களும் அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts