கண்ணாடி துண்டு வெட்டியதற்கு சிகிச்சை பெற தவறிய பெண் பலி!

கண்ணாடி துண்டுகள் வெட்டியதற்கு உரிய சிகிச்சை பெறாததல் கிருமி தொற்று ஏற்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையை சேர்ந்த தயாரூபன் உதயகுமாரி (வயது 50) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த ஒரு மாத கால பகுதிக்கு முன்னர் குறித்த பெண்ணுக்கு காலில் கண்ணாடி துண்டுகள் வெட்டி உரிய சிகிச்சை பெறாதமையால் காலில் வீக்கம் ஏற்பட்டுள்ளது.

அதற்கு தனியார் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இருந்தும் குணமாகதாதல் கடந்த 03ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிருமி தொற்று ஏற்பட்டமையால் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.

Related Posts