கண்டி மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு!

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளது.

நாளை காலை 6 மணிவரை இந்த ஊடரங்கு நடைமுறையில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கண்டி திகன நகரில் இன்று காலை முதல் ஏற்பட்ட அசாதாரண நிலமையை அடுத்தே இந்த ஊடரங்கு போடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்…

முஸ்லிம் இளைஞர்களின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞனின் இறுதிக் கிரியைகள் தற்போழுது நடைபெற்று வருகிறன்றன.

இந்த நிலையில் பிரதான வீதியோரங்களில் காணப்படும் முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது பெரும்பான்மையினரால் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நீர் தாரைப் பிரயோகம் நடத்தியதோடு பொலிஸ் ஊடரங்கு போடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

வாகனம் ஒன்றை ரிவேஸ் பண்ணும் போது முச்சக்கர வண்டியில் பட்டு சைட் கண்ணாடி உடைந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட கைகலப்பில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன் கடந்த ஒரு வாரங்களாக வைத்தியசாலையில் இருந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts