கண்டியில், திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரத்தினால் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், “கண்டியில் மூடப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படும்” என நேற்று(ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
இதனடிப்படையில் குறித்த கண்டி பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டு ,அதன் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்டியில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால், கடந்த 7ஆம் திகதியிலிருந்து அனைத்து பாடசாலைகளும் மறுஅறிவித்தல் வரும் வரை மூடப்படுமென, கல்வியமைச்சு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.