கண்டி பதற்றத்திற்கு காரணமான பிரதான சந்தேகநபர் கைது!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை தோற்றுவித்த பிரதான சந்தேகநபர் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் மேலும் ஒன்பது சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்றயதினம் (வியாழக்கிழமை) காலை குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அமித் ஜீவன் வீரசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீடித்த குழப்பநிலை காரணமாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு மக்கள் அச்சத்தில் உறைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts