கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக அரவிந்த்சாமி!

சில வருடங்களுக்கு முன் ‘புதையல்’ என்ற படத்தில் அர்விந்த்சாமியை இயக்கிய செல்வா, தற்போது மீண்டும் ஒரு படத்தில் அர்விந்த்சாமியை இயக்கவிருக்கிறார்.

அப்போது பிஸியான ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமியின் மார்க்கெட் ஆட்டம் காண புதையல் போன்ற படங்கள்தான் காரணம்.

என்றாலும் பழசை மறந்துவிட்டு தற்போது செல்வாவுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். அதோடு அரவிந்த்சாமி கேட்ட 3 கோடி சம்பளத்தை தயாரிப்பாளரிடமிருந்து செல்வா வாங்கித்தந்ததுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் அரவிந்த் சாமி கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதற்காக அரவிந்த்சாமி கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருக்கிறார்கள். ஒரு கதாநாயாகியாக ‘இறுதிசுற்று’ படநாயகி ரித்திகா சிங் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகியாக நந்திதா ஸ்வேதாவும் நடிக்க இருக்கிறார்கள். இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகிறது.

Related Posts