கண்டாவளை பகுதி காணிகளை விடுவித்தது ராணுவம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு தொகுதி, நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுவிக்கப்பட்டது.

கரைச்சி, கண்டாவளை பகுதியில் உள்ள 38 ஏக்கர் தனியார் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளன. காணிகளை விடுவித்தமைக்கான ஆவணங்களை, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம், ராணுவத்தினர் கைளித்துள்ளனர்.

இக் காணிகள் உரிய முறையில் இனங்காணப்பட்டு, காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கு பிரதேச செயலாளர்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படுமென அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

காணி விடுவிப்பு நிகழ்வில், கரைச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்

Related Posts