கண்கவர் உலக கோப்பை தொடக்க விழா!

உலக கோப்பை தொடக்க விழா நேற்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மற்றும் நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் ஆகிய இரு நகரங்களிலும் ஒரே நேரத்தில் நடந்தது.

world-cup-2015-1

ஒவ்வொரு நாட்டுகுழுவும் தங்களது கலைநிகழ்ச்சிகளை திரண்டிருந்த கூட்டத்தினர் முன்பு நிகழ்த்தி காண்பித்தனர்.

world-cup-2015-34

இலங்கை சார்பில், எமது நாட்டின் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலையில் கிரீடம் வைத்துக் கொண்ட பெண்கள் இரு குழுவாக ஆடினர். ஒரு குழு நீல வண்ணத்திலும் மற்றொரு குழு சிவப்பு வண்ணத்திலும் ஆடை அணிந்து புன்முறுவலுடன் ஒய்யார ஆட்டம் போட்டனர்.

world-cup-2015-4

இந்தியா சார்பில் நடத்தப்பட்ட நடனத்தின்போது. ஹிந்தி பாடலுக்கு ஆண்களும், பெண்களும் வேகமான நடன அசைவுகளுடன் குத்தாட்டம் போட்டனர். இந்திய தேசிய கொடி பின்னணியில் பறக்கவிடப்பட்டிருந்தது.

வங்கதேசம் சார்பில் நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் அந்த நாட்டு கிரிக்கெட் அணியின் சீருடையை டி சர்ட்டாக போட்டு ஆட்டம் போட்டனர். இந்த குழுவிற்கு பெண் ஒருவர் தலைமை தாங்கினார். பின்னணியில் வங்கதேச கொடி பறக்கவிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் சார்பில் குத்தாட்டம் மிஸ்சிங். மைக் மோகன் போல ஒருவர் மைக்கை பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்துவிட்டார். 1980களில் வெளியான தமிழ், ஹிந்தி திரைப்படங்களில் ஹோட்டல்களில் ஒருவர் பாட பக்கத்தில் இருவர் நின்று கோரஸ் பாடுவார்களே, அதேபோல இருவர் நின்று கோரஸ் பாடினர். சிறுவர், சிறுமிகளை அழைத்து வந்து பாகிஸ்தான் தேசிய கொடியை கையில் கொடுத்து நடக்க விட்டனர்.

தென் ஆப்பிரிக்காவின் சார்பில் டிரம்ஸ் நடனம் என்ற ஆதிவாசி நடனம் நடத்தப்பட்டது. இரு வாலிபர்கள் வந்து பேண்ட் மட்டும் போட்டபடி ஆடினார்கள் பார்க்கலாம் ஒரு ஆட்டம். அரங்கம் அதிர்ந்துவிட்டது.

ஸ்காட்லாந்து சார்பில் பேக்பைப் வாத்திய குழுவினர் வாசிப்பு நிகழ்த்தினர். நியூசிலாந்தின் மவுரி எனப்படும் பாரம்பரிய நடனம் மக்களை பெரிதும் கவர்ந்தது. அந்த நடனத்தின் ஒலியும், அசைவுகளும் அச்சுறுத்துவதை போல இருந்தது.

ஐக்கிய அரபு எமிரேட்டை பொருத்தளவில் கலீஜி எனப்படும் ஒரு நடனத்தை நிகழ்த்தி காண்பித்தனர். மூன்று பெண்கள் உடலை நைட்டி போன்ற ஆடையால் முழுவதுமாக மூடியபடி தலைமுடியை சுழற்றியபடி ஆடினர். கிட்டத்தட்ட சில அசைவுகள் ‘பெல்லி டான்சை’ நினைவுபடுத்துவதாகவும் இருந்தது.

ஆஸ்திரேலியா சார்பில் பாப் பாடல் அரங்கேற்றப்பட்டது. ஆனால், குத்தாட்டம் போடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் குழுவோ, டிரம்ஸ் வாசித்து கடுப்படித்தது. இறுதியில் பல வண்ண வானவேடிக்கைகள் இரு நகரங்களையும் அதிர செய்தன.

மேலும் படங்களுக்கு..

Related Posts