கணிஷ்ட பிரிவு மாணவர்கள் துஷ்பிரயோகம்: சிரேஷ்ட மாணவர்கள் மூவர் கைது

கண்டி – குண்டசாலை பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரும் அதே பாடசாலையில் 11, 12 மற்றும் 13ம் தரத்தில் கல்வி பயில்பவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 24ம் திகதி குறித்த மூன்று மாணவர்களும், குண்டசாலை பகுதியிலுள்ள பாடசாலையில் வைத்து கணிஷ்ட பிரிவு மாணவர்கள் சிலரை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்துள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் அவசரத் தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வத்தேகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts