கணித,விஞ்ஞான பாட ஆசிரியர் 308 வெற்றிடங்களுக்கு 294பேரே விண்ணப்பம்!

வடக்கு மாகா­ணத்­தில் கணித, விஞ்­ஞான பாடங்­க­ளுக்கு 308 வெற்­றி­டங்­கள் காணப்­ப­டு­கின்ற நிலை­யில், 294 பேரே இதற்கு விண்­ணப்­பித்­துள்­ள­னர். இத­னால் போட்­டிப் பரீட்சை நடத்­தாது, நேர்­மு­கத் தேர்வை நேர­டி­யாக நடத்தி நிய­ம­னங்­கள் வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வடக்கு மாகா­ணப் பாட­சா­லை­க­ளில் காணப்­ப­டு­கின்ற கணி­தம் மற்­றும் விஞ்­ஞா­னப் பாடங்­க­ளுக்­கு­ரிய வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்­காக, பட்­ட­தா­ரி­க­ளி­ட­மி­ருந்து மாகா­ணப் பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வி­னால் விண்­ணப்­பங்­கள் கோரப்­பட்­டி­ருந்­தன.

மாகாண பொதுச் சேவை ஆணைக்­கு­ழு­வுக்கு 456 விண்­ணப்­பங்­கள் கிடைக்­கப் பெற்­றி­ருந்­தன. விண்­ணப்­பங்­கள் ஆரா­யப்­பட்­டன. விண்­ணப்­பித்த சிலர், கணி­தம் மற்­றும் விஞ்­ஞா­னம் இரண்டு பாடங்­க­ளுக்­கும் தனித் தனியே விண்­ணப்­பங்­களை அனுப்­பி­யுள்­ளமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

ஏதா­வது ஒரு பாடத்­திற்கு மாத்­தி­ரமே விண்­ணப்­பிக்க முடி­யும் என்­ப­தால், இரண்டு பாடங்­க­ளுக்­கும் விண்­ணப்­பித்த விண்­ணப்­பங்­க­ளில் ஒரு பாடத்­திற்­கு­ரிய விண்­ணப்­பம் மாத்­தி­ரமே ஏற்­கப்­பட்­டது.

பாடங்­க­ளுக்­கான வெற்­றி­டம் 308 ஆகக் காணப்­பட்ட நிலை­யில், 294 பேர் மாத்­தி­ரமே விண்­ணப்­பங்­களை அனுப்­பி­யுள்­ள­னர்.

வெற்­றி­டங்­களை விடக் குறைந்­த­ள­வி­லா­னோர் விண்­ணப்­பித்­துள்­ள­மை­யி­னால் போட்­டிப் பரீட்­சையை நடத்­தா­மல், ஆளு­ந­ரின் அனு­ம­தி­யைப் பெற்று நேர்­மு­கத் தேர்வை நேர­டி­யாக நடத்த மாகா­ணப் பொதுச் சேவை­கள் ஆணைக்­குழு பரிந்­து­ரைத்து, வடக்கு மாகா­ணக் கல்வி அமைச்­சுக்கு அனுப்பி வைத்­துள்­ளது.

294 விண்­ணப்­ப­தா­ரி­க­ளி­ன­தும் விண்­ணப்­பங்­கள் வடக்கு மாகாண கல்வி அமைச்­சி­னால் பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கின்­றன. வடக்கு மாகாண கல்வி அமைச்சு கோரிய தகு­தி­கள் உள்­ள­னவா என்று ஆரா­யப்­ப­டு­கின்­றது. தகமை அற்ற விண்­ணப்­பங்­கள் நிரா­க­ரிக்­கப்­ப­டும் என்று கூறப்­பட்­டது.

Related Posts