கட்டுப்பாட்டு விலை நீக்கத்தால் அரிசியின் விலை உயர்வு!

கடந்த வாரம் அரிசிக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டதையடுத்து வர்த்தகர்கள் விலைகளை உயர்த்தி வருவதாகப் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

புறக்கோட்டை மொத்த வியாபாரத்தில் அரிசிக்கான மொத்த விற்பனை விலை 75 தொடக்கம் 92 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட நாடு, பொன்னி, வெள்ளை அரிசி முறையே 65,75,80 ரூபாவாகவும், உள்நாட்டு சிவப்பரிசி 78 ரூபாவாகவும் சம்பா 92 ரூபாவாகவும் காணப்படுகின்றன.

விலைக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர் அரிசியின் சில்லறை விலை 4 தொடக்கம் 5 ரூபாவரை அதிகரித்துள்ளதுடன், இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி 85 ரூபாவாகவும், சம்பா 95 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.

இதேவேளை தற்போது 45 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி கையிருப்பில் உள்ளது எனவும், அவற்றினை இந்த வாரத்தில் லக்சல சதொச விற்பனைக் கூடங்கள் மூலம் விநியோகிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் தலைவர் எம்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts