கட்டுப்பாட்டு விலையில் இருந்து சிறிய லாபத்துடன் அரிசி விற்பனை

கட்டுப்பாட்டு விலையில் அரிசி விற்பனை செய்வது தொடர்பாக வர்தக சங்கப் பிரதிநிதிகள், வர்தகர்கள் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை 4 மணியளவில் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது.

இதன் போது வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர்களின் நன்மை கருதி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதன்படி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட அரிசியின் விலையில் சதொசாவில் விற்பனை செய்யப்படுகின்றன. அதனை எடுத்து தனியார் வர்த்தகர்கள் விற்பனை செய்வதாயின் கோக்குவரத்துச் செலவுடன் சிறிய லாபத்தினை வைத்து விற்பனை செய்துகொள்ள முடியும்.

இதற்கு எதிராக அதிக விலையில் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் அரசாங்கத்தால் அறிவிக்கப்படாத உயர்தரம் மிக்க தரமான அரிசிகளை கொள்வனவுக்கு ஏற்ற வகையில் விற்பனை செய்யமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரிசியின் கட்டுப்பாடு விலை தொடர்பாக சரியான தீர்மானம் எடுக்கும்வரை இந்த நடைமுறை பின்னற்றப்படும் எனவும் இக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts