அரிசிக்கு நியமிக்கப்பட்ட உயர்ந்தபட்ட சில்லறை விலைக்கும் மூன்று ரூபா குறைவாக சதோசவில் அரிசி விற்கப்படுவதாக, அமைச்சர் ரிஷாட் பதியூதின் தெரிவித்துள்ளார்.
தேசிய மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிகள் சதோச களஞ்சியசாலைகளில் தேவையான அளவு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நடமாடும் வாகனங்களைப் பயன்படுத்தி நகர மற்றும் சன நெரிசலுள்ள பகுதிகளில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, லக் சதோ நிறுவனத்தின் தலைவர் டி.எம்.கே.பி.தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், வரவுள்ள பண்டிகைக் காலத்தில் அரிசியின் விலை அதிகரிக்கும் எனவும் சிலரால் பொய்யான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும், நாட்டில் ஒருபோதும் அரிசிக்கு பற்றாக்குறை ஏற்படாது எனவும் விலை குறைவடைந்தாலும் அதிகரிக்காது எனவும் அந்த அமைச்சு மேலும் கூறியுள்ளது.