பிரான்ஸில் இருந்து இலங்கை திரும்பிய மட்டக்களப்பை சேர்ந்த தந்தையும் மகளும் நேற்று (புதன்கிழமை) மாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு 4, ஆரையம்பதியைச் சேர்ந்த அலையப்போடி தியாகராசா அவரது மகள் தியாகராசா ஜனனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சுமார் 25 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸ் சென்று வாழ்ந்து வருவதாகவும் மகளின் திருமண ஏற்பாடுகளுக்காக சொந்த ஊர் திரும்பிய வழியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டமைக்கான காரணம் இன்னமும் வெளியாகவில்லை.