கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்து நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக இன்று (17) முதல் நிறுத்தப்படுகிறது

இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும், விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே யாழ்ப்பாணம் விமான நிலையம் மூடப்பட்டிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்கு விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Related Posts