ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் தமது விமானங்களில் Samsung Note 7 தொலைபேசிகளின் பாவனைக்கு முற்றாகத் தடை விதித்துள்ளது.
இந்த தடை நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் அறிவித்தல் பலகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மின் வலுவேற்றும் போது கைபேசிகள் வெடித்துள்ளதாக 10 இற்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் முறைப்பாடு செய்ததை அடுத்து, சாம்சுங் நிறுவனம் தனது தற்போதைய வெளியீடான சம்சுங் நோட் 7 தொலைபேசிகளின் விற்பனையை தடைசெய்துள்ளது.
எனினும் குறித்த தொலைபேசியை பயணத்தின் போது கொண்டு செல்பவர்கள் தொடர்பினை நிறுத்தி (switch off) தமது பையில் கொண்டு செல்லுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடை பற்றி விமான நிலையங்களிலும், விமானத்தினுள்ளும் பயணிகளுக்கு அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.