கட்டார் வாழ் இலங்கையர்களுக்கான முக்கிய அறிவிப்பு

கட்டாரிலிருந்து இலங்கைக்குச் செல்பவர்கள், கட்டார் நாட்டின் உள்ளேயே, தங்களது பணத்தினை டொலராக மாற்றிக் கொள்ளுமாறு, கட்டாரில் உள்ள இலங்கைக்கான தூதுவர் ஏ.எஸ்.பி. லியனகே ஆலோசனை வழங்கியுள்ளார்.

தற்போழுது சுமார் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இலங்கையர்கள் கட்டார் நாட்டில் உள்ளதாகவும், இப்போதைக்கு நாட்டின் நிலைமை மிகவும் அமைதியாகக் காணப்படுவதாகவும், விமான சேவைகளில் மாத்திரமே பிரச்சினைகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை இலங்கையிலிருந்து கட்டாருக்கு வருபவர்கள் தமது பயணத்தைச் சற்று தாமதப்படுத்துவது நல்லது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts