கட்டாரில் வேலைவாய்ப்பு : இணைய விளம்பரங்களை நம்ப வேண்டாம்!

அதிக சம்பளத்துடன் கட்டார் நாட்டில் வேலை வாய்ப்பு என இணையதளங்களில் வெளியாகும் செய்திகளை நம்பி ஏமாறவேண்டாம் என கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இணையத்தளங்களூடான விளம்பரங்களை நம்பி இலங்கையிலிருந்து கட்டார் நாட்டுக்கு வேலைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இவ்வாறு வருபவர்களில் பலர் வேலையற்று காணப்படுவதாகவும் அத்தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான விளம்பரங்கள் தொடர்பில் கட்டார் நாட்டிலுள்ள இலங்கை தூதரகத்திடம் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts