கட்டாக்காலி நாய்கள் விவகாரம் அமைச்சரவைக்கு – டக்ளஸ் தேவானந்தா

dogயாழ் மாவட்டத்தில் உள்ள கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை யாழ் மாவடடச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு கட்டாக்காலி நாய்களினால் பொது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டபோதே இதனை அவர் தெரிவித்தார்.

யாழ் மாவட்டத்தில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகாரித்துள்ளது இதனால் நாய்க்கடிக்கு இலக்காகுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

நாள் தோறும் யாழ் போதனாவைத்தியசாலையில் குறைந்தது 15 பேர் நாய் பூனைக்கடிக்கு உள்ளாகி கிசிச்சை பெற்று வருகின்றனர். இதனால் ஊசிமருந்தேற்றுவதற்கு பெருளவு பணத்தினை வைத்தியசாலை செலவு செய்துவருகின்றது.

இவ்வாறான கட்டாக்காலி நாய்களைக் கட்டுப்படுத்த உள்ளுராட்சி மன்றங்கள் உதவ வேண்டும் என்று இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், நாய்களைக் கொல்லக் கூடாது என்பதில் அரசாங்கம் கொள்கையாக இருந்து வருகின்றது. இவ்வாறு யாழ் மாவட்டத்தில் பிடிக்கப்படும் கட்டாக்காலி நாய்கள் தொடர்பில் அமைச்சரவையில் கதைத்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

Related Posts