கட்சி பாகுபாடின்றி சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்கப்படும் – பந்துல

தொழில்வாய்ப்பற்ற சகல பட்டதாரிகளுக்கும் இவ்வருடத்தில் தொழில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ராஜகிரிய, கோட்டே பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சகல பட்டதாரிகளுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த நியமனம் வழங்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

எந்தவித அரசியல், கட்சி பாகுபாடுமின்றி அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

Related Posts