கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் இருப்பது அவசியம்: இரா.சம்பந்தன்

sambanthan 1_CIஒரு கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது அவசியமானது. அவ்வாறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டால் அதை ஆராய்ந்து தீர்வினை முன்வைக்க முடியும்’ என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், ‘ தமிழர் விடுதலை கூட்டணியின் மூன்று உறுப்பினர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் காணப்படுவது சரியானதா’ என உடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

‘கருத்து முரண்பாடுகள் காணப்பட்டால் மாத்திரமே கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை இணங்காண முடியும்.

சாதியின் அடிப்படையில், வேட்பாளர் தெரிவு இடம்பெறவில்லை. முஸ்லிம் வேட்பாளர்களை நியமிப்பதற்கான கால அவகாசம் கிடைக்கவில்லை. ஆனாலும், 51 வேட்பாளர்களில் ஒரு முஸ்லிம் வேட்பாளர் மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், இவ்வாறான கருத்து வேறுபாடுகள் இருந்தால், அந்த கருத்துக்களை எடுத்து அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டு, அதற்கான தீர்வினை முன்வைக்க முடியும்’ என்று அவர் மேலும் கூறினார்.

தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவோம்

தற்போது வேட்பாளர் நியமனங்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. எதிர்வரும் வியாழக்கிழமை நண்பகல் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த பின்னரே, தேர்தல் பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அதற்கு பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்.

அதேவேளை, தேர்தல் திகதிக்குள் 6 வாரத்திற்கு முன்னர் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டு மக்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். மக்கள் அவற்றினை வாசித்து நன்கு அறிந்து கொள்வதற்கான கால அவகாசம் வழங்கப்படும்’ என்றும் அவர் கூறினார்.

Related Posts