கடையடைத்து பேரணிக்கு ஆதரவு

தமிழ் மக்கள் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘எழுக தமிழ்’ பேரணிக்கு, யாழ். நகர முழுவதிலும் உள்ள கடைகள் பூட்டப்பட்டு, மக்கள் தமது ஆதரவினை வழங்கியுள்ளனர்.

இதன்படி யாழ் நகரபகுதியில் உள்ள வர்த்தக மற்றும் வியாபார நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தனியார் நிறுவனங்கள், சந்தைகள் என அனைத்தும் பூட்டப்பட்டப்பட்டுள்ளன.

யாழ் நகர் தவிர்ந்த வலிகாம் தென்மராட்சி வடமராட்சி பகுதிகளிலும் கடைகள் பூட்டப்பட்டு பேரணிக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

Related Posts