கடைகளைப் பூட்டி எழுக தமிழுக்கு பூரண ஆதரவு!

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்துக் கடைகளையும் பூட்டி பூரண ஆதரவு வழங்கவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட சிகையலங்கார சங்கம் அறிவித்துள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண நகரின் கலைத்தூது மண்டபத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிகையலங்கார சங்கத்தின் பிரதிநிதி தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கமைய தாம் கடைகளனைத்தையும் மூடி ஆதரவைத் தெரிவிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமராட்சி மற்றும் தென்மராட்சி வர்த்தக சங்கங்களும் இப்போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன. அத்துடன் எதிர்வரும் சனிக்கிழமை கடைகள் அனைத்தையும் பூட்டி பேரணிக்கு முழுமையான ஆதரவை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் தொடர்பான மேலதிக செய்திகளுக்கு..

Related Posts