கடும் வெப்பம்: 4 மாகா­ணங்­க­ளுக்கு விஷேட அறி­வு­றுத்தல்

நாட்டில் நிலவும் அதிக வெப்­ப­மான கால­நிலை கார­ண­மாக வடமேல், மேல், சப்­ர­க­முவ மற்றும் தென் மாகா­ணங்­க­ளுக்கும் மன்னார், மொன­ரா­கலை ஆகிய மாவட்­டங்­க­ளுக்கும் விஷேட அறி­வு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த பகு­தி­களில் வெப்பம் அதி­க­ரிக்கக்கூடும் என்­பதால் பொதுமக்கள் சுகா­தார நலன் தொடர்பில் அக்­க­றை­யுடன் செயற்­பட வேண்டும் என்று அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

அதிக வெப்­ப­மான கால­நிலை தொடர்பில் அர­சாங்கம் விடுத்­துள்ள விஷேட அறி­வித்­தலில் கூறப்­பட்­டி­ருப்­ப­தா­வது:

நாட்டில் நிலவும் அதிக வெப்­ப­மான கால­நிலை தொடர்பில் பொது­மக்கள் மிகவும் அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்டும் என்று அர­சாங்கம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது. இதன்போது முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் சுகா­தார அமைச்சு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

இவ்­வா­றான அதிக வெப்­பத்­து­ட­னான கால­நிலையால் சிறு­வர்கள், வய­தா­ன­வர்கள், நீண்ட கால­மாக இரு­தய நோய்க்­குள்­ளா­கி­யி­ருப்­ப­வர்கள் மற்றும் நுரை­யீரல் நோய்க்­குட்­பட்­ட­வர்கள் விரை­வாக பாதிக்­கப்­ப­டு­வார்கள்.

அதிக வெப்­பத்தால் வெப்ப அழுத்தம் (Heat Stress), சதைப்­பி­டிப்பு (Heat Cramps), வெப்ப பக்­க­வாதம் (Heat Stroke) என்­பன ஏற்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்கள் அதிகம் காணப்­ப­டு­கின்­றன.

இவ்­வா­றான பாதிப்­புக்­க­ளி­லி­ருந்து தம்மை பாது­காத்துக் கொள்­வ­தற்­காக நிழ­லான அல்­லது குளிர்­மை­யான இடங்­களில் ஓய்­வெ­டுத்தல் மற்றும் முடிந்­த­ளவு தண்ணீர் அருந்­துதல் வேண்டும். அத்­தோடு உடலில் சதை­யுள்ள பகு­தி­களில் துடிப்பு, அதிக வியர்வை, உடல் நடுக்கம் அல்­லது பதற்­ற­மாக இருத்தல், மயக்கம் போன்­றவை காணப்­பட்டால் ஆடை­களை இல­கு­வாக்கி ஓய்­வெ­டுக்க வேண்டும்.

ஏனைய சில நாடு­களில் இவ்­வாறு அதி­க­ரித்த வெப்­பத்­தினால் உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன. எனவே இலங்­கையில் உயி­ரி­ழப்­புக்­களை தடுப்­ப­தற்­காக நீண்டகால மற்றும் குறு­கியகால நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பதில் அர­சாங்கம் கவனம் செலுத்­தி­யுள்­ளது.

அதற்­க­மைய குறு­கியகால வேலைத்­திட்­டங்­க­ளாக தடங்­க­லின்றி குடிநீர் வழங்­குதல், சீனி அதி­க­மு­டைய குடிநீர் பானங்கள் கூடு­த­லாக பரு­கு­வதைத் தவிர்த்தல், கூடுதல் வெப்பம் நிலவும் நேர­மான முற்­பகல் 11 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணி வரை வெளியில் நட­மா­டு­வதைக் குறைத்துக் கொள்­ளுதல் அல்­லது வெளியில் செல்லும்போது தொப்­பியைப் பயன்­ப­டுத்­து­மாறு அறி­வு­றுத்தல் என்­பன முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

அதேபோன்று நீண்டகால வேலைத்­திட்­டங்­க­ளாக சிக்­க­ன­மான முறையில் நீரைப் பயன்­ப­டுத்த அறி­வு­றுத்தல், அநா­வ­சி­ய­மாக மின்­சார விர­யத்தைக் குறைத்தல், மின் உப­க­ர­ணங்­களின் பாவ­னையைக் குறைத்தல், குப்பைகளை எரிப்பதற்கு பதிலாக மாற்று வழிகளை கையாளுதல் என்பன முன்னெடுக்கப்படவுள்ளன.

சுகாதார பாதிப்புக்கள் தொடர்பில் 071-0107107 என்ற சுகாதார அமைச்சின் தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொண்டு மும்மொழிகளிலும் பொதுமக்கள் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Related Posts