கடும் மழையால் 60,000 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பெய்த கடும் மழை காரணமாக 60,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுமார் 2,300 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், நேற்று (06) தெரிவித்தது.இதில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே அதிகமான வீடுகள் மற்றும் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் மாத்திரம் 2,023 வீடுகள் மற்றும் சுமார் 51,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இது தவிர, நேற்றைய தினம், சுமார் 15 மாவட்டங்களில் மழை பெய்ததுடன் கடற்பிரதேசங்களில், மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியதாக காலநிலை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Posts