கடும் மழைக்கு மத்தியிலும் போராட்டத்தை கைவிடாத மக்கள்

கடும் மழைக்கு மத்தியிலும் முல்லைத்தீவு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணி மீட்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மக்களின் கோரிக்கைக்கு தீர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில், இன்று 15 ஆவது நாளாகவும் அம் மக்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்.

விமானப் படையினரால் விடுவிக்கப்பட்டதாக கூறப்பட்ட காணிகளை தம்மிடம் கையளிக்க வேண்டும் என வலியுறுத்தியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளளது.

கடந்த 30 ஆம் திகதி தமது காணிகள் விடுவிக்கப்படும் என கிராம உத்தியோகத்தர் அழைப்பு விடுத்ததன் பேரில் தாம் வருகைதந்த போதிலும் அதிகாரிகள் எவரும் வருகை தராததை அடுத்து மக்கள் காணி மீட்பு போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

அதிகாரிகள் தம்மை ஏமாற்றுவதாக தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கபோவதாக தெரிவித்த மக்கள், கடந்த 31 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.

Related Posts