கடும் பஞ்சம் 48 மணிநேரத்தில் 110 பேர் பலி, அவரச உதவி கோருகிறது சோமாலியா!

சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவிவரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்துக்குள் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மாதிரம் 110 பேர் மரணமாகியுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஹசன் அலி ஹைரே தெரிவித்துள்ளார்.

தென் மேற்கு பே பகுதியில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவிவரும் நெருக்கடியான காலக்கட்டத்தில் வெளியாகும் முதல் அதிகாரப்பூர்வ உயிரிழப்பு எண்ணிக்கை இது.

ஆனால், நாட்டின் மீதான வறட்சியின் முழு தாக்கம் இன்னும் தெரியவில்லை. வறட்சியைத் தொடர்ந்து மிகப்பெரியளவில் பஞ்சம் ஏற்படும் என்று மனிதநேய குழுக்கள் அஞ்சுகின்றனர்.

இதுவரை 7 ஆயிரம் வரையிலான மனித நேயக் குழுக்கள் உதவி வருகின்றன. இருப்பினும் சோமாலியாவின் வடக்குப் பகுதியில் 65 வீதமான உயிரினங்கள் அழியும் நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 3 மில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்கி வருகின்றனர். உணவுப்பற்றாக்குறை ஒருபக்கமிருக்க குடிப்பதற்கு சுத்தமான நீரின்றி கொலரா எனப்படும் நோயினால் வேகமாக இறப்புக்கள் நிகழ்ந்துவருகின்றது.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று சோமாலிய அதிபர் முகமது அப்துல்லாஹி ஃபெர்மாஜோ வறட்சியை தேசியப் பேரழிவாக அறிவித்தார்.

Related Posts