நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கிலும், மின்பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அரச அலுவலகங்களிலுள்ள (A/C) பாவனையை, குறைத்துக்கொள்ளுமாறு கோரி, சுற்றறிக்கையொன்றை வெளியிடப்படவுள்ளது.
இந்தச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்கள், A/C யினை 26 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறும் குறிப்பிடப்படும் என்றும், எரிபொருள் மற்றும் சக்தி பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.