Ad Widget

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட மாணவரை சந்திக்க விரும்பும் பேஸ்புக் நிறுவனர்

கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமது ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார்.

amerecca-child-mark-clook

பேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக் கூடாது. ’அகமது, பேஸ்புக் தலைமையகத்திற்கு வர விரும்பினால்,நான் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்’. கண்டுபிடிப்புகளை தொடருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மார்க் ஸக்கர்பெர்க் மட்டும் அல்ல, ஹிலாரி கிளிண்டன் உட்பட பல முக்கிய நபர்கள் மற்றும் அமெரிக்க பொது மக்கள் மாணவர் அகமது முகமதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதில் ஒருவர் “ ஒரு வெள்ளை இன சிறுவன் அணு இணைவு உலையை உருவாக்கினால் அது பாரட்ட தகுந்த சாதனை. அதுவே ஒரு முஸ்லிம் கடிகாரம் உருவாக்கினால் ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். ஒரு ஆண்டு முன்னர் வெள்ளை இன சிறுவன் ஒருவன் அணு இணைவு உலையை உருக்கி பலரது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Posts