கடாக்கள், சேவல்கள் வெட்டப்பட்டு துர்க்காபுரம் பேரம்பல வைரவருக்கு வேள்வி!

தெல்லிப்பழை துர்க்காபுரம் பேரம்பல வைரவர் ஆலய வருடாந்த பொங்கல் விழாவும் வேள்வியும் இன்று மிகவும் பக்திப் பரவசமாக இடம்பெற்றது.

அதிகாலையில் இடம்பெற்ற பொங்கல்கள் படையல்கள் மற்றும் விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து வேள்விக்கு கடாக்கள் பலியிடும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

தெல்லிப்பழை சுகாதார வைத்தியதிகாரி எஸ்.நந்தகுமார் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் கடாக்களை பரிசோதனை செய்து அனுமதி வழங்கிய நிலையில் கடாக்க்கள் மற்றும் சேவல்கள் என்பன வெட்டப்பட்டு பலியிடப்பட்டன.

குறிப்பாக சுமார் இருநூற்றி ஐம்பதில் இருந்து முன்னூறு கடாக்களும் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டன.

நேர்த்தியின் நிமித்தம் ஆலயத்துக்கு உயிருடன் சேவல்கள் வழங்கப்பட்டன. யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பொது மக்கள் வேள்வியில் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்புக் கருதி தெல்லிப்பழை பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

Related Posts