கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்!!

பத்தரமுலையில் உள்ள குடிவரவு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வரிசையில் காத்திருந்த கர்ப்பிணி தாயொருவர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை குழந்தையை பிரசவித்துள்ளார்.

கடவுச்சீட்டு பெற வந்த ஹட்டனை சேர்ந்த பெண்ணுக்கே இவ்வாறு குழந்தை பிறந்துள்ளது.

வரிசையில் நின்று பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணைப் பார்த்த இராணுவ வீரர்கள், அவரை காசல் வைத்தியசாலையில் அனுமதிக்க ஏற்பாடு செய்தனர்.

அதற்குள் அவருக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும் இந்த நிலையில், தாயும் கைக்குழந்தையும் நலமுடன் இருப்பதாகக் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts