கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் அதிகரிப்பு!

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வரவுசெலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைய இந்தக் கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு அமைய, ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளதுடன், சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டைப் பெறுவதற்கு 3,000 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது.

முன்னதாக ஒரே நாளில் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக கட்டணமாக 7,500 ரூபா அறவிடப்பட்டதுடன், சாதாரண சேவையில் 2,500 ரூபா அறவிடப்பட்டு வந்தது.

இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகளுக்கான கட்டணங்கள் அதிகரிப்படவில்லை என்றும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts