ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயும் இருதரப்புக் கலந்துரையாடல்களுக்காக கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று பிற்பகல் சந்தித்தனர். இருவருக்கிடையிலான தனித்த சந்திப்பைத் தொடர்ந்து இரண்டு தலைவர்களும் நீடிக்கப்பட்ட கலந்துரையாடல்களுக்காக தங்களது தூதுக்குழுவினருடன் இணைந்தனர். இந்தக் கலந்துரையாடல்கள் கடல்வழித் துறையிலும், சர்வதேச மன்றங்களிலும் இரண்டு தேசங்களும் உறவுகளைப் பலப்படுத்துவது தொடர்பாக கணிசமானளவு கவனத்தைச் செலுத்தின.
- Saturday
- January 11th, 2025