கீரிமலை, சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்று காணாமல் போயிருந்த மாசியப்பிட்டியை சேர்ந்த சிவலிங்கம் உமாசங்கர் என்ற 16 வயது சிறுவனின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீரிமலை, சேந்தாங்குளம் கடலுக்கு சனிக்கிழமை காலை 10 மணியாளவில் இரண்டு சிறுவர்கள் குளிக்க சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் கடலில் தத்தளித்துகொண்டிருந்த நிலையில் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளதுடன் மற்றைய சிறுவன் காணாமல்போயிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.