கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்பு

body_foundநெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை சிப்பாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புங்குடுதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த பி.எம்.எஸ்.சம்பத் (வயது 25) என்ற கடற்படை சிப்பாயே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த வேளை அவர்களை பிடிப்பதற்கு புங்குடுதீவு கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை சிப்பாய்கள் மூவர் சென்றுள்ளனர்.

அதன்போது படகு கவிழ்ந்ததில் மூன்று கடற்படை சிப்பாய்களும் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டதுடன் ஒருவர் இன்று சடலமாக மீட்டுள்ளார்.

சடலம் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

நெடுந்தீவுக் கடற்பகுதியில் கடலில் வீழ்ந்த சிப்பாயைக் காணவில்லை!- தொடரும் தேடுதல் வேட்டை

Related Posts