பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் அம்பாந்தோட்டை துறைமுக ஊழியர்கள் மீது கடற்படையினர் தாக்கியதில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
தங்களது நியமனங்களை நிரந்தரமாக்குமாறும், துறைமுக வளாகத்தில் சீனாவின் முதலீடுகளைத் தடுக்குமாறும் கோரி கடந்த 7ஆம் திகதியிலிருந்து அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தில் பணிபுரியும் 483 ஊழியர்கள் நுழைவாயில் முன்பாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து கலைப்பதற்காகச் சென்ற கடற்படையினருக்கும் ஊழியர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு முறுகல் நிலையில் முடிவடைந்துள்ளது.
இச்சம்பவத்தில் கடற்படையினரால் தாக்கப்பட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் உட்பட 6பேர் அம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவத்தைக் கடற்படைப் பேச்சாளர் கப்டன் அக்கரம் அலவி முற்றாக நிராகரித்துள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு அமைய கப்பலொன்றை தடுத்து வைத்திருப்பது சட்டவிரோத செயல். எனவே அந்தக் கப்பலை விடுவிப்பதற்காகவே கடற்படையினர் குறித்த பகுதிக்குச் சென்றதாவும் அவர் தெரிவித்தார்.