கடற்படையினர் உதவியுடன் அந்தோனியார் ஆலயம் புனரமைப்பு

யாழ்பாணத்தில் உத்தர கடற்படை முகாமின் வளாகத்திற்குள் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை புனரமைப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர்.

church-

முற்றிலும் புனர்நிர்மாணம் செய்ததுடன் திருப்பலியும் அண்மையில் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் இதில் கத்தோலிக்க பக்தர்கள் மற்றும் தென் கடற்படையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோர் பங்குகொண்டனர். திருப்பலியை அருட்தந்தை சுனில் குமார் பீரிஸ் ஒப்புக்கொடுத்தார்.

இச் செயற்றிட்டத்திற்கு தேவைப்பட்ட மொத்த நிதித் தேவையும் இலங்கை கடற்படையின் புத்த சங்கத்தினால் வழங்கப்பட்டது. இவ் ஆலயத்தை புனரமைக்க தென் கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் அதிக ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்கது.

Related Posts