கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவரை தேடி அலைந்த தாய் ஒருவர் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
இவர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி நடத்தப்படுகின்ற அனைத்து போராட்டங்களிலும் பங்கெடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு நேற்று (புதன்கிழமை) உயிரிழந்தவர் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை பகுதியைச் சேர்ந்த செபமாலைமுத்து திரேசம்மா என்ற தாயார் ஆவார்.
தனது மகனான செபமாலைமுத்து ஜெபபிரகாஸ் என்பவரை கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து தேடி போராட்டம் நடத்திவந்த நிலையில் நேறறு அவர் உயிரிழந்துள்ளார் .
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை முதலாம் திகதியன்று மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரிடம் தனது மகனை ஒப்படைந்த நிலையில் இன்றுவரை அவர் குறித்த தகவல் எதனையும் அறியாத நிலையில் இவர் பல்வேறு போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்தியிருந்தார். இவருடைய இழப்புக்கு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதி முதல் தங்களுடைய உறவுகளுக்கு நீதிகோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு நடைபெற்றுவரும் போராட்டம் இன்றுடன் 869 ஆவது நாளாகத் தொடர்கின்றது.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உறவுகள் பலர் உயிரிழந்த நிலையில் இன்றும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படாத நிலையில் உறவுகள் தொடர்ச்சியாக தங்களுடைய உயிர்கள் பிரிவதற்கு முன்பதாக உறவுகளை ஒரு நாளாவது எங்களோடு வாழ விடுங்கள் என கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் நிலையில் அந்தக் கோரிக்கைகள் பலனளிக்காத நிலையில் மற்றுமொரு தாயாரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடற்படையினரிடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட மகன்: