கடற்படைத் தளபதியால் ஓய்வு விடுதி திறந்து வைப்பு!

வளலாய் வடக்கில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்.மறைமாவட்ட குருக்களுக்கான ஓய்வு விடுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் மற்றும் கடற்படைத் தளபதி ரவீஸ் சின்னையா ஆகியோர் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்படி விடுதியினைத் திறந்து வைத்துள்ளனர்.

ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் வடக்கு கடற்படைத் தளபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க குறித்த ஆயர் இல்லம் கடற்படை வீரர்களின் பொறியில் பிரிவினரின் மனிதவலுவுடன் கட்டப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில், வடக்கு கட்டளைத் தளபதி றியர் அட்மிரல் ஜெயந்த.டி.சில்வாரூபவ், கடற்படை அதிகாரிகள் மற்றும் பங்குத் தந்தைகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts